ஆசிரியர் தகுதி தேர்வு: 7 ஆண்டுக்கு மட்டுமே தகுதி - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஐந்து மாதங்களுக்கு பின் அரசு பொது  நூலகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சென்னை  கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார். 'டெட்' தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் சான்றிதழ் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், இன்று இதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்