நாளை வணிக வளாகங்கள் திறப்பு - வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் நாளை வணிக வளாகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
x
அதில் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம் குறைந்தது 6 அடி தூரத்தில், சமூக இடைவெளி அவசியம் என கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும் என்றும், நோய் அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்க கூடாது என கூறியுள்ளது. வணிக வளாகங்களில் இசை உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என்றும், கழிப்பறைகளை ஒரு நாளைக்கு 6 முறை சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி குறைந்தது 50 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மால்களில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்