கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் - பதிலளிக்க அரசு காவல் ஆணையருக்கு உத்தரவு

கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக்கூறி சுரேந்திரனின் மனைவி வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு, தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்