சாத்தான்குளம் வழக்கு - ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், காவலர்கள் தாக்கியதில் இறந்த தந்தை- மகனின் உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி. ஐ தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் வழக்கு - ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
x
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தயார் செய்த புகாரில் கையெழுத்திட்டதை தவிர வேறு எந்த தவறையும்  தான் செய்யவில்லை என தலைமை காவலர் முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் கணினி ஆப்பரேட்டராக பணியாற்றிய நிலையில், வேறு எந்த செயலிலும் ஈடுபடவில்லை என தாமஸ் பிரான்சிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவர் மீதான புகாரில் சாட்சியாக கையெழுத்திட்டதை தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை என முத்துராஜ் தரப்பில் வாதிடப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கிறஞர் ,  கொல்லப்பட்ட பென்னிக்ஸ் உடலில் 13 காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், ஜெயராஜ் உடலில் 17 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் இருவரின் இறப்புக்கும்  கடுமையான காயம் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார். கொரோனாவால் விசாரணை அதிகாரிகள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட நிலையில், விசாரணை முழுமையாக முடியவில்லை என்றும் மூவருக்கும் ஜெயராஜ்-பென்னிக்ஸின் மரணத்தில் தொடர்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், தற்போது ஜாமீன் வழங்க இயலாது என்று கூறி ஜாமீன் மனுக்களை
தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்