ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்ற தீவிர நடவடிக்கை

சென்னை அயனாவரம் பகுதியில், ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்ற தீவிர நடவடிக்கை
x
ரவுடி சங்கர் காவல்துறையினர் என்கவுன்டரில்  கொல்லப்பட்டதால், இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணைய விதிகளின்படி சிபிசிஐடிக்கு மாற்ற வாய்ப்புள்ளது. அதற்கான  பரிந்துரையை சென்னை காவல் துறை டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி  வைத்ததோடு வழக்கு தொடர்பான கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக முறையான அறிவிப்பு டிஜிபி அலுவலகத்தில் இருந்து இன்று வெளியாகும். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டிருந்த சங்கரின் உடலை இன்று காலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். சங்கரின் உடல், அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று மாலை வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்