ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்பு, வீட்டுப்பாடம் மற்றும் பாடத் திட்டத்தை குறைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்
x
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை இல்லை என மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. பெற்றோர், நாள்முழுவதும் மாணவர்களை கண்காணிக்க முடியாது என்றும் வாதிட்டது. தொடர்ந்து கணினி பார்ப்பதால், பார்வை குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறிய மனுதாரர் தரப்பு.  கிராம புறங்களிலும் 44% பேரிடமும், நகரங்களில் 65%  பேரிடமும் மட்டுமே இணைய வசதி உள்ளதால், கல்வி அனைவருக்கும் சென்று சேரவில்லை என குற்றம்சாட்டினர். தொலைக்காட்சி மூலம் தனியார் பள்ளிகள் பாடம் நடத்துவது சாத்தியமற்றது என தெரிவித்த நீதிபதிகள், வகுப்பு, வீட்டுப் பாடம், பாடத் திட்டம் ஆகியவற்றை குறைக்கலாம் என்றும், மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தனர்.  பின்னர் இந்த வழக்கின் விசாரணையை, ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்