நகர் ஊரமைப்பு துறை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை - திட்டங்களை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் வலியுறுத்தல்

சென்னை பெருநகர வளர்ச்சி கழக அலுவலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நகர் ஊரமைப்பு துறை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நகர் ஊரமைப்பு துறை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை - திட்டங்களை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் வலியுறுத்தல்
x
சென்னை பெருநகர வளர்ச்சி கழக அலுவலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  நகர் ஊரமைப்பு துறை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டடங்களுக்கு வழங்கப்படவேண்டிய அனுமதிகள், நிலங்களை வகைப்படுத்துதல், அவற்றை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில்  மாவட்ட அலுவலக பணிகளை துரிதப்படுத்துதல், பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகளிடம் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில்  வீட்டுவசதி வாரிய செயலாளர் ராஜேஷ் லக்கானி வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனரும், நகர் ஊரமைப்பு பொறுப்பு இயக்குனர் முருகேஷன்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்