"தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும்" - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழக அரசியலில் அடுத்த 6 மாத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துளளார்,.
x
பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், நாம் கை காட்டுபவர்கள் தான்  2021ல் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என்றும், தமிழக அரசியலில் அடுத்த 6 மாத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்,.  நிர்வாகிகளின் எண்ணம்,  செயல்பாடு  மற்றும் நோக்கம் அனைத்தும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்,. பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து சட்டசபைக்கு அனுப்பும் மாவட்ட தலைவருக்கு இனோவா கார் பரிசளிக்கப்படும் எனவும் எல். முருகன் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்