"ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை  குறைத்து கொள்ள வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "சமூகம் பயன் பெற, நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்" என்றும், "எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், தமக்காக குரல் கொடுத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் சூர்யா நன்றியும்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்