2 லட்சம் மாணவர்களுக்கு பாஸ் மார்க்? - 11 ம் வகுப்பு சேர்க்கையில் கடும் போட்டி உருவாகும் சூழல்

10-ம் வகுப்பு தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு 11-ம் வகுப்பு சேர்க்கையில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மிகப் பெரும் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
2 லட்சம் மாணவர்களுக்கு பாஸ் மார்க்? - 11 ம்  வகுப்பு சேர்க்கையில் கடும் போட்டி உருவாகும் சூழல்
x
பத்தாம் வகுப்பு தேர்வில், 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும், அதன் மதிப்பெண்ணை வைத்து, தேர்ச்சிக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்த வகையில்  சுமார் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், 11-ம் வகுப்பு சேர்க்கையின் போது கடும் போட்டி களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் விரும்பிய பாடப் பிரிவுகளை கேட்டால் வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்