நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
x
நடிகர்கள் விஜய்,சூர்யா பற்றி நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வது, கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிவது போன்றது, என கூறியுள்ளார். பல்வேறு அடித்தளங்கள் அமைத்து விஜயும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளதாகவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.  ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார் என்றும் மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருபவர் நடிகர் விஜய் என்றும் கூறியுள்ளார். அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள பாரதிராஜா, நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது என தெரிவித்துள்ளது.  நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பு அளிக்கிறது என்று பாரதிராஜா  கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்