"யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதி தட்டிப்பறிப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதி தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்ந்திருக்கும் தவறுகளை களைந்து நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதி தட்டிப்பறிப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
x
யுபிஎஸ்சி தேர்வில் அநீதி /2019 குடிமைப்பணி தேர்வில் OBC மற்றும் SC..ST-யினருக்கான சமூகநீதி தட்டிப்பறிப்பு/10% இடஒதுக்கீடு, குடிமைப் பணிகள் தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூகநீதிக்கு பெரும் பாதகம் விளைவித்துள்ளது/மத்திய அரசு தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோர் 'கட் ஆப்' மதிப்பெண் 95.34/10 சதவீத இடஒதுக்கீட்டிற்குரியோருக்கு 'கட் ஆப்'  மதிப்பெண்கள் 90 /இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விட,  5.34 மதிப்பெண்கள் குறைவு


vogfx
card 1
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2019 குடிமைப்பணி தேர்வில் OBC மற்றும் SC..ST-யினருக்கான சமூகநீதி தட்டிப்பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
card 2
உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, குடிமைப் பணிகள் தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும்,  சமூகநீதிக்கு பெரும் பாதகம் விளைவித்துள்ளதைக் காண முடிவதாக தெரிவித்துள்ளார்.
card 3
மத்திய அரசு தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வில்  வெற்றி பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோர் 'கட் ஆப்' மதிப்பெண் 95.34 என இருக்கும் நிலையில் 
card 4
10 சதவீத இடஒதுக்கீட்டிற்குரியோருக்கு 'கட் ஆப்'  மதிப்பெண்கள் 90 மட்டுமே என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ார்.
card 5
இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விட,  5.34 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தாலும்,
card 6
'முதன்மைத் தேர்வு'  எழுத முன்னேறிய உயர் வகுப்பினர்  தேர்வாகியுள்ளனர்.
card 7
முதன்மைத் தேர்வு எழுதியவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் பட்டியலின் படி, இதர பிற்படுத்தப்பட்டோர் மதிப்பெண் 718.
card 8
பட்டியலினத்தவர் மதிப்பெண் 706. பழங்குடியினத்தவர் மதிப்பெண், 699.
card 9
ஆனால்,10 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ளோரின்  மதிப்பெண் வெறும் 696 என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
card 10
இறுதியாக 'நேர்காணல்' கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில், முன்னேறிய வகுப்பினர் 909 மதிப்பெண்கள் பெற்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரியாகத் தேர்வாகியுள்ளார். 
card 11
ஆனால் இதர பிற்படுத்தப்பட்டோர் 925 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்வாக முடியும் என்ற அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்