பிரதமருடன், முதலமைச்சர் நாளை ஆலோசனை - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
x
பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில்,  தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம், முதலமைச்சர் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொது போக்குவரத்தை தொடங்குவது, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்தும் பிரதமருடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்