வறுமையால் நிகழ்ந்த கொடூரம் : மூதாட்டி எரித்துக் கொலை - மகள் உட்பட குடும்பத்தினர் 4 பேர் கைது

மதுரை அருகே மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வறுமையால் நிகழ்ந்த கொடூரம் : மூதாட்டி எரித்துக் கொலை - மகள் உட்பட குடும்பத்தினர் 4 பேர் கைது
x
திருமங்கலம் குண்டாறு பகுதியில் கடந்த சனிக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருமங்கலம் பசும்பொன் தெருவை சேர்ந்த கருப்பாயி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி கருப்பாயியை குடும்பத்தினரே கொலை செய்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து மகள் பழனியம்மாள், பேரன் காளிதாஸ், பேத்தி காளீஸ்வரி மற்றும் மருமகன் வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். பழனியம்மாள் மற்றும் குடும்பத்தினர் கூலி வேலை செய்து வந்த நிலையில் அந்த வருமானத்தில் படுக்கையில் இருந்த மூதாட்டி கருப்பாயியை கவனித்து வந்துள்ளனர். ஊரடங்காலும் போதிய வருமானம் கிடைக்காததால் மூதாட்டிய கவனித்து கொள்ள முடியாமல் முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் உடல் அடக்கம் செய்யவும் பணமில்லாத காரணத்தினால் சடலத்தை குண்டாறு பகுதிக்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்