மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
x
சாத்தான்குளத்தைச் சேர்ந்த இளைஞர் மகேந்திரனை விசாரணைக்கு அழைத்துச்சென்று சாத்தான்குளம் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மகேந்திரனின் தாயார் வடிவு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி வழக்கை விசாரித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். குறிப்பாக சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்த நீதிபதி, செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்