ஊரடங்கால் களையிழந்த ஆடிப் பெருக்கு விழா - மக்கள் வராததால் வெறிச்சோடிய காவிரிக்கரை

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, களையிழந்துள்ளது.
x
முழு ஊரடங்கு காரணமாக கோவில்கள், நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வீடுகளிலேயே மங்கல பொருட்கள் வைத்து பெண்கள் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தினர். திருச்சி காவிரிகரைக்கு மக்கள் யாரும் வராததால், ஆடிப்பெருக்கு களையிழந்தது. ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம், படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை ஆகிய இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் நிலையில், கால்கள் கூட நனைக்க முடியாமல் திருச்சி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்