ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை - போயஸ் தோட்ட இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை - போயஸ் தோட்ட இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அதை நினைவு இல்லமாக மாற்ற, கையகப் படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் இழப்பீடு தொகையாக 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் தலைமையில் அதிகாரிகள் வேதா இல்லதை ஆய்வு செய்தனர். மயிலாப்பூர் தாசில்தார், ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர்  3 மணி நேரத்திற்கு மேலாக போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள கட்டட பகுதிகளை பார்வையிட்டனர். அங்குள்ள அசையா சொத்துக்களை பராமரிப்பது பொது மக்கள் வரக்கூடிய பகுதி உள்ளிட்டவை குறித்தும் 
ஆய்வு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்