தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் - சென்னை உயர் நீதிமன்றம்

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ.  சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010ம் ஆண்டு அறிவிப்பாணை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது. 
கடந்த மார்ச் மாதம், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி முழு பெண் நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்