மேலும் 6,972 பேருக்கு கொரோனா - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.27 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் 6,972 பேருக்கு கொரோனா - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.27 லட்சத்தை கடந்தது
x
தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக உயர்ந்து இருக்கிறது. புதிதாக 4 ஆயிரத்து 707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  57 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 23 லட்சத்து 83 ஆயிரத்து 664 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 88 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது.

சென்னையில் மேலும் 1107 பேருக்கு கொரோனா 

சென்னையில் மேலும் ஆயிரத்து 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்து 865 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் 24 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது, சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகரில் நேற்று 577 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் 12 ஆயிரத்து 852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்