மருத்துவ படிப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு : "சமூகநீதி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்" - மு.க.ஸ்டாலின்
சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் மூலம், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்றால் மிகையாகாது என கூறியுள்ளார்.
சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
திராவிடத்தால் பண்படுத்தப்பட்ட தமிழ் மண், 'சமூகநீதி மண்' என்பதை உணர்த்தியுள்ள இந்தத் தீர்ப்பினை ஏற்று 3 மாதம்வரை பா.ஜ.க. அரசு காத்திருக்காமல், உடனடியாகக் கமிட்டியை அமைத்திட வேண்டும் என ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மீது மத்திய பா.ஜ.க. அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Next Story

