தமிழ்வழியில் பயின்றவர்களின் இட ஒதுக்கீட்டில் சிக்கல் - தொலைதூரக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு

தமிழ்வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டில் குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்குமாறு மதுரைக் கிளை பதிவாளருக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.
தமிழ்வழியில் பயின்றவர்களின் இட ஒதுக்கீட்டில் சிக்கல்  - தொலைதூரக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு
x
இதுகுறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு,  மதுரை சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை தமிழ் வழியில் பயின்றதாகவும்,  2019 ஜனவரியில் அரசு அறிவித்த குரூப்-1 தேர்வில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், எழுத்துத் தேர்வையும் எழுதியாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வரவில்லை என்றும், தமிழ்வழி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள், தொலைதூரக் கல்வியில் பயின்றவர்களும் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது முரண்பாடானது எனக் கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி​, வழக்கு பொது நலன் சார்ந்தது என்றும், பொதுநல வழக்காக விசாரிக்குமாறும், நீதிமன்ற பதிவாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்