அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவகாரம் - தலைமை ஆசிரியர்கள் தனியாக முடிவு செய்யக்கூடாது

அறிவிப்பு வெளியான பிறகே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவகாரம் - தலைமை ஆசிரியர்கள் தனியாக முடிவு செய்யக்கூடாது
x
பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. இதனால், அரசுப் பள்ளிகளில் எப்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என பெற்றோர் தவித்துள்ளனர். இதனிடையே, சென்னை சூளைமேட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை தொடங்கும் என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், மாணவர் சேர்க்கை தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்றும், அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னர், பணிகளை தொடங்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்