துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை - திருமழிசை புதிய பேருந்து நிலைய திட்டம் குறித்த விவாதம்

சென்னையை அடுத்த திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,
x
சென்னையை அடுத்த திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,  பேருந்து முனைய பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு  அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள்  நிலை  குறித்தும்  அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது,  இந்த ஆலோசனை கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி ஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்