சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு - மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வாளர் ஸ்ரீதர் அனுமதி

சாத்தான்குளம் வழக்கில் கைதாகி உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
x
சாத்தான்குளம் வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்த காவல்ஆய்வாளர் ஸ்ரீதருக்கு முதுகெலும்பு தண்டுவடத்தில் பிரச்சினை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களான முருகன், முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 3 பேரும் உடல்நலக் குறைவு ஏற்படுவதாக கூறி தங்களுக்கு ஜாமீன் அளிக்க கோரி மதுரை மாவட்ட சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தனிதனியாக மனுதாக்கல் செய்தனர். இதில் காவலர் முருகனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிறையில் உள்ள காவலர்கள் 10 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்