நாசரேத் தேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் - தேவாலய கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

திருச்செந்தூர் அருகேயுள்ள நாசரேத் தேவாலயத்தின் மீதேறி, தமது குடும்பத்தினருடன் இளைஞர் ஒருவர், தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
தூத்துக்குடி -  நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கீழ் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, அகஸ்டின் என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அகஸ்டின், மற்றும் அவரது மனைவி, மகன்களுடன் கோபுரத்தின் மீது ஏறி குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த, டி.எஸ்.பி. நாகராஜன், நாசரேத் காவல்துறை ஆய்வாளர் சகாயசாந்தி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் ஆகியோர், அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர்.  மேலும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு அகஸ்டின் இறங்கி வந்தார். தற்கொலை மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்