ஊரடங்கால் முடங்கிய பரதநாட்டிய வகுப்புகள் - கை கொடுக்கிறதா ஆன்லைன் பரதநாட்டியம்?

தமிழ் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக எத்தனை கலைகள் இருந்தாலும், எப்போதும் எந்தக் காலத்திலும் முன்னிலை வகிப்பது பரதநாட்டியம் தான்.
ஊரடங்கால் முடங்கிய பரதநாட்டிய வகுப்புகள் - கை கொடுக்கிறதா ஆன்லைன் பரதநாட்டியம்?
x
தமிழ் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக எத்தனை கலைகள் இருந்தாலும், எப்போதும் எந்தக் காலத்திலும் முன்னிலை வகிப்பது பரதநாட்டியம் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதன் மவுசு குறையாமல் பலரிடமும் கற்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பால் 100 நாட்களுக்கும் மேலாக, அரங்கேற்றம் எதுவும் இல்லாமல் நாட்டிய பள்ளிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாததால், ஆன்லைன் மூலம் பரத வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், ஆன்லைனில் 3 நொடிகள் கழித்தே ஆசிரியர்கள் கற்றுத்தரும்  பாவணைகள் மாணவிகளை சென்றடைவதால், தாங்கள் நினைத்ததை மாணவிகளிடம் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை என ஆதங்கப்படுகின்றனர் பரதநாட்டிய கலைஞர்கள். 
கடந்த 4 மாதமாக அரங்கேற்றம் நடத்த முடியாமல்  கோவில்களும், நாட்டிய பள்ளிகளும் பூட்டியே கிடப்பதால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறும் கலைஞர்கள், வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்
தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பரதநாட்டிய வகுப்புகளை மீண்டும் தொடங்க அரசு எப்போது அனுமதி அளிக்கும் என்பதே, நாட்டிய கலைஞர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்