சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - சிபிசிஐடி- சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி மற்றும் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - சிபிசிஐடி- சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை
x
நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாமில் நடைபெற்ற சந்திப்பில், சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, சிசிடிவி டிஸ்க் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அளித்ததாக கூறப்படுகிறது.இந்த ஆவணங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களையும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், சி.பி.ஐ அதிகாரிகளிடம் விளக்கி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று, கோவில்பட்டி சிறைச்சாலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள், விசாரணை மேற்கொள்ள உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்