சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு - முழு ஊரடங்கையும் மீறி நிறுவனம் இயங்கியதாக புகார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வீடு திரும்பும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு - முழு ஊரடங்கையும் மீறி நிறுவனம் இயங்கியதாக புகார்
x
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தனியார் ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வீடு திரும்பும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார். 

அவரது உயிரிழப்புக்கு காரணம், முழு ஊரடங்கையும் மீறி, நிறுவனம் இயங்கியதால் தான் எனவும், இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தனியார் நிறுவனத்தை 
முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

முழு ஊரடங்கில் மது விற்பனை - 2 பேர் கைது

பொள்ளாச்சியில், முழு ஊரடங்கின் போது, மதுக்கடையின் அருகே, மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஏடிசி தியேட்டர் அருகே சாக்கு மூட்டையில் வைத்து மதுவிற்பனை நடப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,  
2 பேரை கைது செய்ததுடன், முப்பதுக்கும் மேற்பட்ட மதுபாட்டில் மற்றும் பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பழமை வாய்ந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் தொடக்கம்


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு 82  லட்சம் ரூபாய் ஒதுக்கியிருந்தது. இதையடுத்து யாக பூஜையுடன் புனரமைப்பு பணிகள் தொடங்கின

நெல்லை  : 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழப்பு 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 6 பேர் 
உயிரிழந்தனர். 

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் சமீபகாலமாக உயிரிழப்பு 
அதிகரித்து வரும் சூழலில், நெல்லை மேலப்பாளையம், ராமையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தத்தில் 55 பேருக்கு புதிதாக கொரோனா

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஒரே நாளில் 55 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. 
மேலும்,காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்த 51 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.

திருமணம் ஆன 4 நாளில் புதுப்பெண் தற்கொலை

பொள்ளாச்சி அருகே, முள்ளம்பன்றி வேட்டையில் ஈடுபட்ட 4 பேருக்கு 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சேத்துமடை மாங்கரை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட 
வனத்துறையினர் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து முள்ளம்பன்றியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒவ்வொருவருக்கும் தலா 13 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்

மகாமக குளத்தில் நீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை

கும்பகோணம் மகாமக குளத்தில் விரைந்து நீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்துள்ளதால், அரசலாற்றில்  இருந்து, மகாமக குளத்தில் நீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 56 பேர் கைது

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 56 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மதுவிற்ற 56 பேர் கைது செய்யப்பட்டு மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது

சேலத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து ஆயிரத்து 272 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஜி கார்னர் சந்தையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஜி கார்னர் சந்தையில் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜி கார்னர் சந்தை பகுதிக்கு மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாயக்கழிவு நீரால் குடிநீர் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், குடிநீர் மாசு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் கூறும் போது, அரசு அறிவித்த சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால், கடும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பரபரப்பு

ஓசூர் அருகே, மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். 

திம்மாசத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இளைஞர்கள் சிலர் வாங்கிய மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதை கீழே கொட்டினர். இதையடுத்து, 
இது போன்று நடப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கொள்ளையடிக்க திட்டம் - 11 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 11 
பேரை போலீசார் கைது செய்தனர். 

அத்திப்பட்டு பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 11 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மீது பல்வேறு வழக்கு உள்ளதாகவும், அப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்
Next Story

மேலும் செய்திகள்