மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்
x
மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர்  சுஜித் குமார் தெரிவித்தார். மதுரை மாவட்ட புதிய  காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை செயல்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் தனது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.குழந்தை திருமணம், பெண் சிசு கொலை உள்ளிட்டவைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  கொரோனா தொற்று பரவலை தடுக்க,  மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுஜித்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்