குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கர்நாடக மாநிலம் நந்தி மலை நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஒசூர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் வழியாக கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 640 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி,  அப்படியே 640 கனஅடி நீரும் தென்பெண்ணை ஆற்றில்  வெளியேற்றப்பட்டு வருகிறது.

வறண்டு காட்சியளிக்கும் வைகை ஆறு


தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு மலைப்பகுதியில் வைகை ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இதுவரை தென்மேற்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் வைகை ஆறு வறண்டு காட்சி அளிக்கிறது. ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட குடிநீர் உறைகிணறுகள் சரிந்து வருகின்றன. இதனால் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்