மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
x
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று மதுரையில், பரவி வருவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி பகுதி  மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் வரும் 14-ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 14-ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும்,ஜூலை 15 அதிகாலை முதல் 31 ம் தேதி வரை வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்