நிலத்தகராறில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் - திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்த போலீசார்

திருப்போரூரில் நிலத்தகராறு காரணமாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.
x
திருப்போரூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான இமயம்குமாருக்கும், திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது இதயவர்மனுடன் வந்த கும்பல் தாக்க முயன்ற போது லட்சுமிபதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் கீரை வியாபாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கோஷ்டி மோதலும் விஸ்வரூபம் எடுத்தது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இதயவர்மனை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தப்பிய எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதியை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்