சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வெளியீடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
x
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 17 ஆயிரத்து 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேர், அண்ணா நகரில் ஆயிரத்து 941 பேர்,  தேனாம்பேட்டையில் ஆயிரத்து 760 பேர், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ராயபுரத்தில் ஆயிரத்து 304 பேர், அடையாறில் ஆயிரத்து 224 பேர், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்