திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையர்கள் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 5 பேர் மீது 162 நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையர்கள் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
திருச்சியில் உள்ள நகைக்கடையில் கடந்த ஆண்டு நகைக்கடை கொள்ளை சம்பவம் நடந்தது. கடையில் இருந்த 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே 162 நாட்களுக்கு திருச்சி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் 90 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் உட்பட 25 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆவதை முன்வைத்து குற்றவாளிகளில் ஒருவரான முருகன் ஜாமீன் பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்