4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
குன்றத்தூர், பண்டார தெருவில் உள்ள குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், 21 வயதான அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.  கடந்த 4 மாதங்களாக வாடகையை தரவில்லை என கூறப்படும் நிலையில், வீட்டின் உரிமையாளர் குணசேகரன், அஜித்திடம் வீட்டு வாடகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், வீட்டு உரிமையாளர் குணசேகரனை அஜித் ஓட, ஓட விரட்டி, சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டு உரிமையாளரை கொலை செய்த அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்