வெளிநாடு வாழ் உறவினர்களிடம் நளினி, முருகன் பேச வழக்கு : வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் - தமிழக அரசு

இலங்கையில் உள்ள தாய் மற்றும் லண்டனில் உள்ள சகோதரியிடம் வேலூர் சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினி வீடியோ கால் பேச சிறை நிர்வாகம் மறுப்பதாக நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வெளிநாடு வாழ் உறவினர்களிடம் நளினி, முருகன் பேச வழக்கு : வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் - தமிழக அரசு
x
இலங்கையில் உள்ள தாய் மற்றும் லண்டனில் உள்ள சகோதரியிடம் , வேலூர் சிறையில் உள்ள  முருகன் மற்றும் நளினி வீடியோ கால் பேச சிறை நிர்வாகம் மறுப்பதாக நளினியின் தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணையில் ஆஜரான பத்மாவின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சிறையில் இருப்போர், வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் செல்போனில் பேச எந்தச் சட்டத் தடையும் இல்லை என வாதிட்டார். வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் நளினி மற்றும் முருகனை பேச அனுமதிப்பது குறித்து வெளியுறவு துறைக்கு கடிதம் எழுதிவிட்டு, பதிலுக்காக காத்திருப்பதாக கூறியது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் ப்பட்டுள்ளது ..

Next Story

மேலும் செய்திகள்