கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ், ஜாமீன் கோரிய மனு மீது,வரும் 16ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
x
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ், ஜாமீன் கோரிய மனு மீது,வரும் 16ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017இல் காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயான், மனோஜ் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர்கள், ஜாமீன் ரத்தாகி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்