சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து ஏற்கனவே விசாரணை
பதிவு : ஜூலை 07, 2020, 03:54 PM
தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மகனை காவல்துறையினர் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் ஏற்கனவே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்நிலையில் இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் மேம்பாட்டு கழக அமைப்பாளர் அதிசய குமார் என்பவர், காவல் நிலையங்களில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதால் அந்த அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் துறை ஜெயச்சந்திரனுக்கு புகார் மனு அனுப்பினார்.இந்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை நிரந்தரமாக தடை செய்ய கோருவதில் நியாயம் உள்ளதா? என கேள்விகள் எழுப்பி, இது குறித்து, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2951 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1644 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

317 views

பிற செய்திகள்

சிஐஎஸ்எப் படைவீரர்கள் 65 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான மண்டல பயிற்சி மையத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

4 views

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

31 views

"இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

69 views

தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பிரமோற்சவ எட்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

65 views

தொடர்மழை - ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரண்டு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது.

111 views

"வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.