மாவட்டங்களில் அதிகம் பரவும் கொரோனா

சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்டங்களில் அதிகம் பரவும் கொரோனா
x
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 766 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 958பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.128 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று  புதிதாக 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 2 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரத்து 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து199 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 216 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 217 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில்,  ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 100 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
வேலூரில் இன்று புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பானது 2 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. 854 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், ஆயிரத்து 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் 260 பேருக்கு புதிதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து  598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து 70 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 69 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு  ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது. 416 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி, 42 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. 137 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள  நிலையில்,  6 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 280 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்