ஆன்லைன் வழி கல்வி திட்டம் இந்தியாவிற்கு உகந்த திட்டமா?

பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்ற விவகாரத்தில் தமிழக அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்பட உயர்கல்வித்துறை சார்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..
ஆன்லைன் வழி கல்வி திட்டம் இந்தியாவிற்கு உகந்த திட்டமா?
x
பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆன்லைன் வழி கல்வி திட்டம், தற்போது நாடு முழுவதும் பேசக்கூடிய முக்கிய திட்டமாக மாறி இருக்கிறது. அதிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான ஒரே மாற்று திட்டமாக ஆன்லைன் வழிக் கல்வித் திட்டம் இருக்கிறது. ஒரு பக்கம் ஆன்லைன் வழி கல்வித் திட்டம் பற்றிப் பேசப்பட்டாலும், ஆன்லைன் வழிக்கல்வி, வழக்கமான கல்வி திட்டத்திற்கு இணையானது அல்ல என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆன்லைன் வழிக்கல்வி குறித்து, தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தேசிய துணை தலைவர் தேவராஜ், ஆன்லைன் வழிக்கல்வி முழுமையாக நல்ல முறையில் வர, இன்னும் 10 வருடங்கள் ஆகும் என்றும், வருங்கால இளைஞர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி ஒரு வரம் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு, நேரம் இல்லாமல் பாடங்கள் குறைக்கப்பட்டாலும், தரம் குறையாமல் பாடங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து கூறிய அவர், 
பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிடுவதை அப்படியே கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பதில் தமிழக அரசு ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்தார். பல்வேறு விவாதங்கள் வைக்கப்பட்டாலும், கொரோனாவால் கல்வி முறை தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்...



Next Story

மேலும் செய்திகள்