சாத்தான்குளம் விவகாரம் மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு கட்டுரை வெளியீடு

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடத்திய கள ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாக மக்கள் கண்காணிப்பகத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு கட்டுரை வெளியீடு
x
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  ஆசீர்வாதம் கள ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர்  பாலகிருஷ்ணன் மீது கைவைத்து தள்ளியதால் ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்னிக்சை  உள்ளாடையோடு நிறுத்தி இரு கைகளையும் விரித்து  அவரது முகத்தை சுவற்றில் பதித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்கள் லத்தியால் பின்புறம் சரமாரியாக அடித்ததாக அந்த கட்டுரையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  பென்னிக்சை அடிப்பதை பார்த்த தந்தை ஜெயராஜ் கதறி அழுது , கெஞ்சிகேட்டும் விடாத நிலையில்,  போலீசாரை திட்டியதால் , ஜெயராஜையும் லத்தியால் கடுமையாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கதறி அழுதது காவல்நிலையத்திற்கு வெளியே வரை கேட்டதாக வேணுகோபால் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவரிடம் மருத்துவ தகுதி சான்று பெற்ற  நிலையில் ரிமாண்டிற்காக நீதிமன்ற நடுவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜையும், பென்னிக்சையும் காவல்துறை வாகனத்திலிருந்து இறங்க போலீசார் அனுமதிக்காத நிலையில் வீடியோ கான்பிரசிங் மூலம் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்ற நடுவர்  உத்தரவிட்டதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்