750 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்

சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் இன்று காலை திறந்து வைக்கிறார்.
750 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்
x
தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, படுக்கை வசதிகளை அதிகரிக்கும் வேலைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து, சென்னை கிண்டியில்,  கிங் ஆய்வகத்துக்கு அருகில் அமைந்துள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 70 படுக்கைகளுடன்,  750 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைக்க உள்ளார்.  இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நேரில் ஆய்வு செய்து திறப்பு விழாவுக்கான பணிகளை பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்