கணவர் இறந்த விரக்தியில் பெண், மகளுடன் தற்கொலை - மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை அடுத்த கீழ்கட்டளையில் பெண் ஒருவர் கணவர் இறந்த விரக்தியில் , மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கணவர் இறந்த விரக்தியில் பெண், மகளுடன் தற்கொலை - மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை
x
கீழ்கட்டளை துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி, இவரது கணவர் கோவிந்தசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் பிரபாவதியின் வீட்டிற்கு அவரது தந்தை செல்வராஜ் வந்துள்ளார், நீண்ட நேரமாக பிரபாவதி கதவை திறக்க காரணத்தால், சந்தேகத்தில் செல்வராஜ் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மகளும், பேத்தியும் ஒரே புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்த மனவேதனையில் பிரபாவதி , மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது , சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்