சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம் - ஜெயராஜ்,பென்னிக்ஸை காரில் அழைத்துச்சென்ற ஓட்டுனரிடம் விசாரணை

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய தனியார் கார் ஓட்டுனரிடம், மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம் - ஜெயராஜ்,பென்னிக்ஸை காரில் அழைத்துச்சென்ற ஓட்டுனரிடம் விசாரணை
x
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரண்டாவது முறையாக விசாரணையை மேற்கொண்டு வரும்  மாஜிஸ்ட்ரேட், தலைமை காவலர் ரேவதி, நிலைய எழுத்தர் பியுலா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய தனியார் கார் ஓட்டுனரிடம், மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். காரில் உள்ள ரத்தகரை படிந்த இடத்தில் இருந்து மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து நிலைய எழுத்தர் அரசு மருத்துவ மனை ஊழியர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே தனக்கு அச்சமாக உள்ளதாக, சாட்சியமளித்த தலைமை காவலர் ரேவதி கூறிய நிலையில், அவரது இல்லத்திற்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்