கோவையில் உயிரிழந்த மூதாட்டி நீலகிரியில் அடக்கம் - எல்லையை கடக்க அனுமதிக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்

நீலகிரியில் உள்ள தங்களது சொந்த ஊரான தங்க நாடு பகுதிக்கு அவரது மகன் மற்றும் உறவினர்கள் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் சென்றுள்ளனர்.
கோவையில் உயிரிழந்த மூதாட்டி நீலகிரியில் அடக்கம் - எல்லையை கடக்க அனுமதிக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
கோவை கவுண்டம்பாளையம், நல்லம்பாளையம் பகுதியில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்ய, நீலகிரியில் உள்ள தங்களது சொந்த ஊரான தங்க நாடு பகுதிக்கு அவரது மகன் மற்றும் உறவினர்கள் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து,  பர்லியாறு சோதனைச் சாவடியில் ஆம்புலன்ஸ் மட்டும் செல்ல அனுமதித்து, உறவினர்கள் வந்த மூன்று கார்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து,மூன்று கார்களில் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

Next Story

மேலும் செய்திகள்