இ பாஸ் - எல்லைகளில் தீவிர வாகன சோதனை

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது..
இ பாஸ் - எல்லைகளில் தீவிர வாகன சோதனை
x
தஞ்சை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மாவட்ட எல்லையான அத்தி கடையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், இ-பாஸ் இல்லை என்றால் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். 

திருச்சி

இதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பும் போலீசார், இ-பாஸ் இல்லாமல் வரக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். 

மதுரை

மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ-பாஸ் உள்ளதா, இ-பாஸ் உண்மையானதா என தீவிரமாக ஆராய்ந்த பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்திலும், பரமத்திவேலூர் அருகே உள்ள எல்லை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சரக்கு போக்குவரத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இ- பாஸ் இல்லாமல் வரும் வாகன ஒட்டிகளை திருப்பி அனுப்பப்படுகின்றனர். விவசாய சார்ந்து வேலைக்கு செல்வோரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்