தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
x
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம், வாரணவாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த இந்த மழையால் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தியடையும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், மின்னல் தாக்கியதில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இதே போன்று பள்ளிப்பட்டு பகுதியில் சின்னத்துரை என்ற விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

கொடைக்கானல் : மிதமான மழை, விவ‌சாயிக‌ள் ம‌கிழ்ச்சி


கொடைக்கானல்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த  ஒரு வாரத்திற்கும் மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. தொட‌ர்ந்து இர‌விலும் விட்டு விட்டு  ம‌ழை பெய்து வ‌ருகிற‌து. இதன் கார‌ண‌மாக‌ விவ‌சாயிக‌ள் ம‌கிழ்ச்சி அடைந்துள்ள‌ன‌ர். நீர் ஆதாரங்கள் வெகுவாக உயர்ந்து வருகிறது

திருவண்ணாமலை : தொடர்ந்து 2வது நாளாக கனமழை குளிர்ச்சியான சூழல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளுர், ஆரணி, சேத்பட், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த இடி மற்றும் காற்றுடன் கனமழை பெய்தால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் 
விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி கனமழை : விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் வாட்டிவந்த நிலையில் பெய்த மழை வெப்பத்தை தணித்தது. மழையால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

திருச்சி : மிதமான மழையால் இதமான சூழல் 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி திடீரென குளிர்ந்த காற்று வீசியதோடு, லேசான சாரல் மழையும் பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் வெளுத்து வாங்கத் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்