மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்

முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.
x
முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார். 

* இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏதாவது ஒரு நல்ல ஆலோசனையை, ஸ்டாலின் வெளியிட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

* அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, அரசை குற்றம் சுமத்தி திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டு வருவதாக, குறிப்பிட்டுள்ளார். 

* கொரோனாவை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் பதில் அளித்ததில் என்ன தவறு இருக்கிறது? என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

* முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர் என்றும், கடவுள் பெயரை சொன்னாலே கோபம் கொள்ளும் ஸ்டாலினின் வெளிப்பாடு தான், அவரது அறிக்கையில் தெரிவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

* விமானம் மற்றும் ரயில்களில் வந்த பயணிகள் மீதும், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீதும் முதலமைச்சர் பழி போட்டதாக ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ள ராஜேந்திரபாலாஜி,

* இந்த நோய் தமிழகத்தில் உருவானது அல்ல என அனைவருக்கும் தெரியும் என்றும், எனவே முதலமைச்சர் பற்றி அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* ஏதோ அதிமுக அரசு தான், கொரோனாவை தோற்றுவித்தது போல தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்புவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,

* தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல் ஸ்டாலினின் அறிக்கை இருப்பதாகவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்