நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாடு காயம் - வாய் சிதறியதால் உண்ண முடியாமல் தவிக்கும் பசு மாடு

வேலூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில், பசுமாட்டின் வாய் சிதறி உயிருக்கு போராடி வருகிறது.
x
வேலூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில், பசுமாட்டின் வாய் சிதறி உயிருக்கு போராடி வருகிறது. தோலப்பள்ளி கடலைக்குலம் கிராமத்தை சேர்ந்த கண்ணையா என்ற விவசாயி, தமது மாடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு புல்லில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாட்டின் வாய் சிதறி படுகாயமடைந்தது. இதனால் உணவு உண்ண முடியாமல், பசுமாடு தவித்து வருகிறது. இதை தொடர்ந்து அங்கு நாட்டு வெடிகுண்டுகளை வைத்த வேட்டை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்