கடன் வசூல் தீர்ப்பாய மீட்பு ஆய்வாளர் கைதான சம்பவம் - குற்றம் உறுதியானதால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏலத்தில் எடுக்கப்பட்ட சொத்தை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட கடன் வசூல் தீர்ப்பாய மீட்பு ஆய்வாளரை மதுரையில் போலீசார் கைது செய்தனர்.
கடன் வசூல் தீர்ப்பாய மீட்பு ஆய்வாளர் கைதான சம்பவம் - குற்றம் உறுதியானதால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
x
ஏலத்தில் எடுக்கப்பட்ட சொத்தை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட கடன் வசூல் தீர்ப்பாய மீட்பு ஆய்வாளரை மதுரையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் மீட்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்த அசோக் குமார் காரில் வந்து லஞ்சம் வாங்கியதாக கடந்த 2012ல் கைது செய்யப்பட்டார். இதனிடையே அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி சிபிஐ நீதிமன்றம் 2017ல் அசோக் குமாரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அசோக் குமார் மீதான குற்றம் நிரூபணமானதாக கூறி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

Next Story

மேலும் செய்திகள்